கோவில்களில் ஆடுகளை பலியிடக் கூடாது..! அதிரடி தடை விதித்த உயர்நீதிமன்றம்..! அதிர்ச்சியில் பக்தர்கள்..!

திரிபுரா மாநிலத்தில் உள்ள கோவில்கள் ஆடுகளை பலியிடுவதற்கு தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.


திரிபுரா மாநிலத்தில் 500 ஆண்டுகள் பழமையான மாதா திரிபுரேஸ்வரி கோவிலில் நாள்தோறும் ஒரு ஆடு பலியிடுவது சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது. அதற்காக திரிபுரா மாநில அரசும் நிதி அளிக்கிறது. 

கோவிலில் ஆடு வெட்டும் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்ஜி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்து உணர்வை புண்படுத்தும் வகையில் நாள்தோறும் ஆடு பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி பதில் அளித்த வழக்கறிஞர், நாடு சுதந்திரம்அடைவதற்கு முன்னரில் இருந்து ஆடு பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார். வீட்டு விலங்கு தியாகம் என்பது வழிபாட்டின் ஒரு அங்கமாக இருப்பதால் அதை நிறுத்த முடியாது’என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட திரிபுரா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் அமர்வு தீர்ப்பை அளித்தது. கோவில்களில் விலங்குகளை பலியிடுவதை தடை செய்யும் சட்டத்தை இயற்ற அரசு முன் வர வேண்டும் என்றும், இதுபோல் நாள்தோறும் ஆடுகளை பலியிடுவது பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் ஆரோக்கியத்துக்கு எதிராக உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர்.

எனவே திரிபுரா மாநிலம் முழுவதும் கோவில்களில் ஆடு வெட்டுவதற்கு தடை விதிப்பதாக தீர்ப்பு எழுதினர்.