கரோனா - மகாராஷ்டிரத்தில் மூன்றாவது நபர் பலி!

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் மகாராஷ்டிரத்தில் உயிரிழந்தார்.


மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 64 வயதுடைய இவர், இந்தியாவில் கரோனாவுக்கு பலியான மூன்றாவது நபர் ஆவார். இறந்துபோன முதியவர், பல நலக்குறைபாடுகளுடன் சிகிச்சை பெற்றுவந்ததாக வட இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

அம்மாநிலத்தின் புனே நகரில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் இன்று முதல் சாத்தப்படுவதாக கோயிலின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கர்நாடகத்தில் கரோனாவால் உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.