சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு! காரணமான தினகரன்! பரபரப்பு தகவல்!

சனிக்கிழமை இரவு முதல் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் தினகரன் எடுத்த திடீர் முடிவு என்று கூறப்படுகிறது.


இனிமேல் அ.தி.மு.க.வை கைப்பற்றும் விவகாரத்தை சசிகலா கவனிப்பார் என்றும், அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அடுத்தகட்ட பணியை தான் மேற்கொள்ளப் போவதாக தினகரன் திடீரென தெரிவித்தார். இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டதும் அப்செட் ஆன சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம்.

ஜெயலலிதா மறைவு வரை முழுக்கமுழுக்க கட்சியை சசிகலாவே கட்டுப்படுத்தி வைத்திருந்தார். தினகரன் வந்தபிறகுதான், கட்சிக்கு பொதுச்செயலாளர், முதல்வர் போன்ற ஆசைகளை சசிகலாவுக்குத் தூண்டினார். தினகரன் சொன்னதைக் கேட்டுத்தான் ஜெயலலிதா போன்று வேஷம் போட்டார். அதுதான் அவருக்கு வினையாகி, உடனடியாக சிறைக்குப் போகவேண்டிய நிலை உருவானது.

தினகரன் கையில் அதிகாரம் தரவேண்டாம் என்று சொன்ன, திவாகரனை குடும்பத்துடன் விலக்கிவைத்தார். அ.ம.மு.க.வில் நுழைய முயன்ற விவேக்கையும், தினகரனுக்காக தடுத்து நிறுத்தினார். அதனால் இப்போது சசிகலாவுக்கு குடும்பத்தினரும் கட்சியினரும் எதிரியாக இருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென தன்னை கழட்டிவிட்ட தினகரன் துரோகத்தை சசிகலா எதிர்பார்க்கவே இல்லை.

அதனால் திடீரென சசிகலா மயக்கம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதும் குணமாகிவிட்டாலும் இன்னமும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லையாம். அவருக்கு ஏற்கெனவே உடலில் ஏராளமான வியாதிகள் உள்ளன, இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் கேட்டதுதான் பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள். மேலதிக சிகிச்சை இப்போது தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் எப்படியாவது சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று இன்றே பெங்களூரு கிளம்பியிருக்கிறார் தினகரன். நாளை அழைப்பு வருமா… அழைப்பு வந்து உள்ளே போனால் சசிகலாவிடம் என்ன சொல்வார், அதற்கு சசிகலா உண்மையில் என்ன பதில் சொன்னார் என்பதை தினகரன் வெளியே சொல்வாரா அல்லது எப்போதும் போல் சின்னம்மா ரொம்ப ஹேப்பி என்று பீலா விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.