குசும்பு சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் ரெடியா?

மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களை காட்டமாக விமர்சனம் செய்துவந்த காரணத்தால்தான், சிதம்பரத்தை பா..ஜ.க. அரசு கைதுசெய்து பாடாய் படுத்துகிறது.


இந்த நிலையில் சி.பி.ஐ. காவலில் இருந்த சிதம்பரம், 5% என்று கையைக் காட்டியது இந்தியா முழுவதும் வைரலாகிப்போனது. உள்ளே போட்டாலும் சிதம்பரத்தின் லொள்ளு தாங்கவில்லை என்ற நிலையில், இன்று திகார் ஜெயிக்கு அவரையும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்ற பா.ஜ.க.வின் ஆசை நிறைவேறிவிடும் போலிருக்கிறது.

சி.பி.ஐ. விசாரணை முழுமையாக முடிந்துவிட்டதால், இனி அவரிடம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சி.பி.ஐ. கைகழுவி விட்டது. இன்னமும் அமலாக்கத்துறை மட்டுமே விசாரணை நடத்தவேண்டியுள்ளது. இந்த நிலையில் இன்று சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், இன்றே அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்து விசாரிக்க முன்வரும் என்று தெரிகிறது.

அப்படி அமலாக்கத்துறை இன்றே கஷ்டடி கேட்கவில்லை என்றால், அவர் திகார் ஜெயிலுக்கு அனுப்பப்படுவது உறுதி. இன்று சிதம்பரம் சிறைக்கு அனுப்பப்பட்டால், திங்கள் கிழமை வரை உள்ளே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆம், திங்கள் அன்றுதான் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுக்க வாய்ப்பு உருவாகும்.

எப்படி இருந்தாலும் திகாரை பார்க்காமல் சிதம்பரம் திரும்ப முடியாது என்பதுதான் உண்மை.