அடப்பாவிகளா? சீனப்பிரதமரை வரவேற்க பள்ளி மாணவர்களை வெயிலில் நிறுத்திட்டீங்களே!

அரசியல்வாதிகளை வரவேற்க பள்ளி மாணவர்களை வெயிலில் நிறுத்தக்கூடாது என்று தமிழக கல்வித்துறை ஓர் உத்தரவே போட்டது.


ஆனால், அது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானோ என்னவோ, சீன அதிபரை வரவேற்கும் வண்ணம், மாமல்லபுரம் வட்டாரத்திலுள்ள தனியார் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வர வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை மார்க்கமாக செல்லும் அவரை வரவேற்க பள்ளிக் குழந்தைகள் 1 மணி நேரம் முன்னதாகவே அங்கு சென்று காத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்ட கல்வித்துறை சார்பாக கூடுகை நடைபெற்றது. இது எந்த வகையில் பிள்ளைகளின் கல்வி அறிவிற்கு உபயோகமாக இருக்கும் என்று புரியவில்லை. அதுவும் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் அனுப்ப வேண்டுமாம்.

ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் 150 மாணவர்களுடன் போய் ரோட்டோரத்தில் நின்றால் பள்ளியில் மீதி இருக்கும் மாணவர்களுக்கு யார் பாடம் நடத்துவது.. ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு விடுமுறைதான் விட வேண்டும்..

தமிழக அரசு மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்காக இப்படி மட்டையாக மடங்கி உத்தரவு போட்டால் அதற்கு கல்வித்துறை மறுப்பு சொல்லியிருக்க வேண்டும்.. அப்படி செய்யாமல் பள்ளி மாணவர்களை (அதுவும் மாணவிகள்தான் வேண்டுமாம்)

அழைத்து வந்து வெயிலில் நிற்க சொல்லும் கல்வித்துறையின் இந்த அடாவடிப்போக்கை தடுக்க வழி இல்லையா?