தஹீல் ரமானியை சும்மா விடமாட்டாங்களாம்! மிரட்டிப் பார்ப்பது யாருங்கோ?

பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சென்னை, தலைமை நீதிபதியாக இருந்த தஹீல் ரமானி


அப்போதே, தலைமை நீதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன என்று மிரட்டப்பட்டார். அதன்பிறகு அவர் டிரான்ஸ்ஃபருக்கு விருப்பம் இல்லாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்போது தஹீல் ரமானிக்கு ஆதரவாக சென்னை பார் கவுன்சில் இருந்தது.

அவருக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தெருவில் இறங்கியது. இந்த விவகாரத்தால் இப்போது தஹீல் ரமானிக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது. நான் சென்னையில்தான் வீடு வாங்கி செட்டில் ஆகியிருக்கிறேன் என்று சொன்னதுதான் பிரச்னையாகியுள்ளது.

ஆம், சென்னையில் தஹில் ரமானி இரண்டு பிளாட்டுகள் வாங்கியதற்கு பணம் எப்படி வந்தது என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாம். அதாவது கடந்த ஜூன் மாதம் 3.18 கோடி ரூபாய் தந்து புதிதாக கட்டப்பட்ட இரண்டு பிளாட்டுகள் வாங்கியுள்ளார். இதில் 1.62 கோடி ஹெச்.பி.எஃப்.சி. வங்கி கடன் மூலமும் மீதத்தை தன்னுடைய பணத்தில் இருந்தும் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் சிக்கலாகியுள்ளது. 

மேலும் அவர் மீது சிலை கடத்தல் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த அமர்வு நீதிமன்றத்தை கலைத்தது ஒரு குற்றமாக சுமத்தப்பட்டுள்ளது. அதனால் தஹீல் ரமானிக்கு சிக்கல் ஆரம்பம் என்றுதான் சொல்லவேண்டும்.