பாடகி சுசித்ராவை திட்டுறாங்கப்பா… வாங்க ஆதரவு கொடுப்போம்.

பரபரவென கலையுலகில் மேலே போன பாடகி சுசித்ராவுக்கு, திடீரென பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, இப்போது மீண்டும் ரேடியோவுக்குத் திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அனைத்து பொதுமக்களையும் போல சுசித்ராவும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தைக் கண்டு பதறினார்.


உடனே, ஜெயராஜ்,பென்னிக்ஸ் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், சுசித்ரா ஆங்கிலத்தில் வீடியோ வெளியிட, அது பரபரவென பற்றிக்கொண்டது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கும் இந்த வீடியோ மூலம் அநியாயத்தை எடுத்துக் கூறினார்.

இப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டியினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதேநேரம், சுசித்ராவை அ.தி.மு.க.வினர் மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

கெட்ட வார்த்தைகளாலும், மிரட்டல் வார்த்தைகளாலும் தொடர்ந்து சுசித்ராவை மிரட்டி வருகிறார்கள். ஒரு நல்ல சிந்தனைக்காக, தான் சரியென்று நினைத்த ஒரு விஷயத்துக்காக பாடகி சுசித்ரா மேற்கொண்ட நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகும் நேரத்தில், அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டியது மக்களின் கடமை. ஆகவே, எல்லோரும் சுசிக்கு கை கொடுப்போம்.