கொரோனாவில் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் மூன்றே மூன்று!

உலகின் முன்னேறிய பல நாடுகளில் கொரோனா மரணம் எக்குத்தப்பாக எகிறிவரும் நேரத்தில், இந்தியாவில் மட்டும் இன்னமும் கட்டுக்குள்தான் இருக்கிறது. இதற்கான மூன்று காரணங்கலைக் கூறுகிறார் எய்ம்ஸ் மருத்துவரான டாக்டர் நாரேந்திர குமார் வர்மா.


1. இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம். வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உருவாகும் டி.உயிரணுக்கள் நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று பாதுகாக்கின்றன

2. வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர். இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.

3. இந்தியர்கள் உணவில் மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம் போன்ற பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதேபோல் நிலவேம்பு, கபசுர குடிநீர் போன்றவற்றை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். 

அடடே, அதனால்தான் கொரோனா இந்தியர்களைக் கண்டு அலறி ஓடுகிறதா? தொடர்ந்து பலவித மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொண்டு, கொரோனாவில் இருந்து வெற்றி பெறுவோம்.