இந்த செயல்களை செய்தால் உங்களுக்கும் பைல்ஸ் பிரச்சனை கட்டாயம் வரலாம்!

பைல்ஸ் பிரச்சனை பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


மலத்தை நீண்ட நேரம் கட்டுப்படுத்துவதால், ஆவனவாய் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, மூல நோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. உங்களுக்கு மலத்தைக் கட்டுப்பத்தும் பழக்கம் இருப்பின், உடனே அதை மாற்றுங்கள்.

நீங்கள் கழிவறையில் மொபைலைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் இருப்பவராயின், உடனே அப்பழக்கத்தை மாற்றுங்கள். ஏனெனில் இப்பழக்கம் இருப்பவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கழிவறையில் நீண்ட நேரம் அதிக அழுத்தத்துடன் மலத்தைக் கழிக்கும் போது ஆசனவாயில் உள்ள நரம்புகளில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக பைல்ஸ் உண்டாக்கிறது.

வழக்கமான மற்றும் சௌகரியமான குடல் இயக்கங்களுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். யார் ஒருவர் குறைவான அளவில் நார்ச்சத்தை எடுக்கிறாரோ, அவர்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். மலச்சிக்கலின் போது மலத்தைக் கழிக்க மலக்குடல் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஆசனவாய் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, மூலநோயை ஏற்படுத்தும்.