ஷாப்பிங் மாலில் பெண்ணின் பின்புறத்தில் தகாத செயலுடன் சுய இன்பம்! அதிர வைக்கும் சம்பவம்!

ஹரியானா மாநிலம் குர்கானில் வணிகவளாகத்துக்குச் சென்ற பெண்ணிடம் ஒருநபர் இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் உதவுவதற்கு ஆளில்லாமல் அலறித் துடித்த அந்தப் பெண்ணிடம் பின்னர் போலீசார் டிவிட்டர் மூலம் மன்னிப்பு கோரியுள்ளனர்.


வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிக்கொண்டு அந்தப் பெண் எஸ்கலேட்டரில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது பின் புறத்தில் எதுவோ ஊர்வது போலவும் குலுக்குவது போலவும் உணர்ந்த அந்தப் பெண் திரும்பிப் பார்த்த போது பின்புறத்தில் மிக நெருக்கமாக ஒரு நபர் தவறான மற்றும் இயற்கைக்கு மாறான செயலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அந்த நபரைத் தான் தாக்கிய போது அவன் பதிலுக்கு மிக தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடியதாக அந்தப் பெண் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தான் அழுது துடித்த போதும் வணிகவளாகத்தில் இருந்த எவரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் போலீசாரும் அருகில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

போலீசாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் தனக்கு நேர்ந்ததை பதிவிட்டும் போலீசார் மெத்தனமாக இருந்துவிட்டதால் அந்த நபர் தப்பிவிட்டதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து டிவிட்டரில் அந்தப் பெண்ணிடம் நடவடிக்கை எடுக்க தாமதத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள போலீசார் உங்கள் பாதுகாப்பே எங்கள் இலக்கு என்றும் இந்த விவகார தொடர்பாக நேரில் சந்தித்து தகவல்களை பெற்று அந்த நபரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.