நண்டு கொளுத்தா வலையில் தங்காது என்பார்கள். அந்த வகையில், எக்கச்சக்கமாக சொத்துக்களை சேர்த்துவிட்ட தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அவ்வப்போது தன்னுடைய கிண்டலை எல்லோர் மீதும் வீசுவார்.
ஏழை மாணவர்கள் நெஞ்சில் ஈட்டியை குத்தும் துரைமுருகன்… கிண்டலுக்கும் கேலிக்கும் அளவே இல்லையா..?
கருணாநிதி, ஸ்டாலினைக்கூட அவ்வப்போது கிண்டலும் கேலியும் செய்வார் துரைமுருகன். அதெல்லாம் பரவாயில்லை. இன்று ஏழை மாணவர்களை கிண்டல் செய்ததுதான் வில்லங்கமாக மாறியிருக்கிறது.
இன்று செய்தியாளர்கள், 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் அரசு கட்டணம் கூட செலுத்த முடியாத நலிந்த மாணவர்கள் உதவி கேட்டு தி.மு.கவை அணுகலாமா என்று கேட்டனர்.
அதற்கு துரைமுருகன் கிண்டலாக, வருஷத்துக்கு ₹40 ஆயிரம் கட்ட முடியாதவங்க , எப்படி டாக்டர்க்கு படிக்கணும் ? என்று அசால்டாகப் பேசிய விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
அந்த அளவுக்குப் பணம் கட்ட முடியாத ஏழைகள் கோடிகளில் உள்ளார்கள் என்ற விபரம்கூட தி.மு.க. பொதுச்செயலாளருக்குத் தெரியவில்லை என்பதுதான் வேதனை. தினமும் கோடிகளில் சம்பாதிப்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் என்பது கேவலமாகத்தான் தெரியும்.