ஒரே ஒரு வார்த்தை! பாஜக எம்பிக்களை ஆர்பரிக்க வைத்த ஏபிஎஸ் மகன்!

டெல்லி: பாஜக எம்பி.,க்கள் கைதட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பதவியேற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


17வது மக்களவை கூட்டத் தொடர் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. இதன்படி, மக்களவையில் இன்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பி.,க்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியில் பேசி, பதவியேற்றுக் கொண்டனர். இதில், திமுக கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள், தமிழ் மொழியில் பதவியேற்க, பதிலுக்கு பாஜக.,வினர் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே
போன்ற கோஷங்களை முன்வைத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்போது, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், தமிழில் பேசி பதவியேற்றுக் கொண்டார். அத்துடன் நிற்காமல், எம்ஜிஆர் வாழ்க, ஜெயலலிதா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என அவர் பேசினார்.

உடனே, பாஜக எம்பி.,க்கள் அனைவரும் அவருக்கு பலத்த கைத்தட்டல் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழக எம்பி.,க்கள் பலர் பதவியேற்ற போது கோஷமிட்ட பாஜக.,வினர், தனி ஆளாக வந்த ரவீந்திரநாத் குமாருக்கு கைத்தட்டிய விசயம், நாடு முழுவதும் கவனிக்கப்படுவதாக அமைந்துள்ளது.