பாசமா பேசுவான்! கேட்குறதலாம் கொடுப்பான்! ஆனால்..! 3 பெண்களை சீரழித்த ஆபாச பட டிரைவர்! தேனி திகுதிகு!

தேனியில் பேருந்தில் ஏறும் பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி பழகி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தேனி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் சத்யன். தேனியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றியவர்  சத்யன். வயது என்னவோ 50 என்றாலும் மன்மத கலையிலும் தில்லுமுல்லு செய்வதிலும் கைதேர்ந்து விளங்கினார்.

இவருக்கு எத்தனாட்சி என்ற பெண் பெண்ணுடனும் பின்னர் எஸ்தர் ராணி என்ற பெண்ணுடனும் இரண்டு முறை திருமணங்கள் நடைபெற்றன இருவருக்கும் பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரையுமே விவாகரத்து செய்தார். சத்யனுடன் வாழப்பிடிக்காமல் அந்தப் பெண்கள்தான் விலகிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகுதான் சத்யனின் ஆட்டம் தொடங்கியது. பேருந்தில் வழக்கமாக வரும் பெண்களிடம் பேச்சுக் கொடுத்து நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பேருந்தை விட்டு இறங்கியதும் அவர்களது சொந்தக் கதை சோகக் கதைகளை கேட்டு ஆறுதல் கூறுவது போல அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர் தனது வீட்டுக்கு அவர்களை வரவழைத்து அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோ எடுத்து அவற்றை கொண்டு மிரட்டி பணம் பறிப்பதும் பாலியல் ரீதியான ஆதாயங்களை பெற்றுக் கொள்வதும் வழக்கம் என்று கூறப்படுகிறது. 

சத்யனிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்த மூன்று பெண்கள் காவல்துறையில் புகார் அளித்தனர் அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சத்யனை கைது செய்துள்ளனர்.