இளம் கவர்ச்சி நடிகைக்கு எம்பி சீட்! பாஜக தாராளம்!

தெலுங்கு நடிகை மாதவி லதாவுக்கு, பாஜக எம்பி., சீட் கொடுத்துள்ளது.


நுவ்விலா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மாதவி லதா. இவர், அரசியல் ஆர்வம் கொண்டவர் ஆவார். இதன்பேரில், இவர் பவன் கல்யாண் நடத்தி வரும் ஜன சேனா கட்சியில் சேர்ந்து, அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், பவன் கல்யாண் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகியவர், தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 

ஆனால், அங்கு அவருக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. எப்படியேனும், வர உள்ள எம்பி தேர்தலில் போட்டியிட வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்பேரில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தற்போது மாதவி லதா விலகியுள்ளார். 

இதையடுத்து, பாஜக.,வில் இணைந்த மாதவி லதா, கட்சித் தலைமையிடம் சீட் கேட்டு தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு, கைமேல் பலன் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில், குண்டூர் வெஸ்ட் தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் தரப்படலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்த தொகுதியை கன்னா லஷ்மி நாராயணா தனது மகனுக்கு ஒதுக்கும்படி கேட்டு, முயற்சிகள் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.