என்னை தூக்கில் போடுங்க..! அமைச்சரிடம் மனு கொடுத்த விதவை பெண்! அப்போது அவர் வெளியிட்ட பகீர் தகவல்!

கணவனைக் கொன்று விட்டதாக கூறி தூக்கிலிட வேண்டுமென அமைச்சரிடம் மனு கொடுத்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஹரியானாவில் உள்ள அம்பாலா பகுதியைச் சேர்ந்த ரோத்தஸ் சிங் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 

இந்நிலையில் ஹரியானா அமைச்சர் ஒருவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தபோது, ரோத்தஸ் சிங் என்பவரின் மனைவி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார். அதனை படித்த அமைச்சருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை தானே கொலை செய்து விட்டதாகவும் அதற்காக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதால் உண்மையை ஒப்புக் கொண்டு சிறை தண்டனை பெற முடிவு செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு போலீஸ் தரப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு ரோத்தஸ் சிங் மனைவியை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், தனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்ததாகவும், அந்த வேதனை பொறுக்க முடியாமல் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் கூறி இருக்கிறார். இதனை மறைப்பதற்கு கணவர் உணவு சாப்பிடுகையில் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறி மருத்துவமனையிலும் அனுமதித்ருக்கிறார். 

மருத்துவமனை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோதும் எந்தவித சந்தேகமும் வரவில்லை என்பதால் இயற்கையான மரணம் என எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியாக, இந்த மனுவின் அடிப்படையில் தற்போது கைது செய்து மனைவியை சிறையில் அடைத்துள்ளனர்.