மகள் வனிதா வீட்டுக்குள் போலீசை அனுப்பிய விஜயகுமார்! காரணம் இதுதான்!

கடந்த ஒரு மாத காலமாக ஓய்ந்திருந்த விஜயகுமார் அவரது மகள் வனிதா இடையிலான சொத்துப் பிரச்சனை மீண்டும் தலைதூக்கியுள்ளது.


   நேற்று திடீரென சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகை வனிதா விஜயகுமார் வந்திருந்தார். காவல் ஆணையரை சந்திக்க அனுமதித்தால் தான் செல்வேன் என்று பிரச்சனை செய்த அவரை, வேறு வழியில்லாமல் காவல் ஆணையரை சந்திக்க அதிகாரிகள் அனுமதித்தனர். ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த பிறகு வனிதா செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது வனிதா கூறியதாவது! போரூரில் நான் இருந்த வீட்டில் இருந்து என்னை விரட்டி அடித்துவிட்டார்கள். இதனால் எனது தாய் மஞ்சுளா அவர் சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீடு ஒன்று மாதவரத்தில் உள்ளது.அந்த வீட்டிற்கு நான் சென்றுவிட்டேன். என்னை போரூரில் இருந்து விரட்டியது போல், மாதவரம் வீட்டில் இருந்தும் விரட்ட எனது தந்தை விஜயகுமார் முடிவு செய்தார்.

   இதனால் நான் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது ஒரு குடும்ப சொத்து பிரச்சனை, எங்கள் குடும்ப பிரச்சனை. இந்த பிரச்சனையில் மாதவரம் போலீசார் தலையிடுகின்றனர். காலையில் என் வீட்டிற்குள் திடீரென ஏராளமான போலீசார் வந்தனர். நான் பதறிப்போய் என்ன என்று கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் என்னை அழைத்துச் சென்றனர்.என்னை கைது செய்திருப்பதாக போலீஸ் கூறியது. என்னை என்னுடைய வழக்கறிஞரிடம் கூட பேச அனுமதிக்கவில்லை. காவல் நிலையம் சென்ற பிறகு தான் என்னிடம் அங்குள்ள போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்தனர். மாதவரம் வீட்டை விட்டு வெளியேறினால் விட்டுவிடுவதாக போலீசார் கூறினர். இதனால் அதிர்சசி அடைந்த நான் என் அப்பாவிடம் காசு வாங்கிவிட்டு என்னை மிரட்டுகிறீர்களா என பிரச்சனை செய்தேன்.

   அதன் பிறகு என்னை விட்டுவிட்டார்கள். நான் நியாயம் கேட்க நேராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை முதலமைச்சரின் உதவியாளர் மட்டுமே சந்தித்தார். அவர் தான் நேராக காவல் ஆணையர் அலுவலகம் சென்று புகார் அளிக்குமாறு கூறினேன். அதன் பிறகு காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து, எனது குடும்ப பிரச்சனையில் போலீஸ் தலையிடக்கூடாது என்று கூறினேன்.

   மேலும் வீடு பிரச்சனை சிவில் விவகாரம், அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதையும் சுட்டிக்காட்டினேன். இதனால் இந்த விவகாரத்தில் போலீசார் இனி தலையிடமாட்டார்கள் என்று விஸ்வநாதன் உறுதி அளித்தார். இவ்வாறு வனிதா கூறியுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்ற பிரச்சனை வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது.   இதற்கு சொத்துகளை விஜயகுமார் சரி சமமாக பிரித்துக் கொடுக்காதது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது- வனிதாவிற்கு என்று கொடுத்த சொத்துகளையும் எல்லாம் அவர் அழித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் வனிதாவோ தனக்கு கொடுத்ததை விட விஜயகுமார் தனது இரண்டாவது மனைவியின் மகனான அருண் விஜய்க்கு தான் அதிக சொத்துகளை கொடுத்ததாக கூறி பிரச்சனை செய்து வருகிறார். மேலும் வனிதாவிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அவர் சமாதானம் அடையமாட்டார் என்பதால் தான் விஜயகுமார் போலீஸ் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.