பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவகாரத்து செய்துள்ளார்.
மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்! அமலா பால் காரணமா?

கடந்த 2009ம் ஆண்டு
வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் விஷ்ணு விஷால்.
அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் விஷ்ணு கதாநாயகனாக நடித்து வந்தார். எந்த ஒரு
படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும்,
பேசப்படும் நடிகராக இருந்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டு ரஜினி என்கிற பெண்ணை
காதலித்து விஷ்ணு திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலம் முதல் காதலித்து வந்த இவர்கள்
திருமணம் செய்து கொண்டு கடந்த 2015ம் ஆண்டு மகன் ஆர்யனை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் தொடர்ந்து
திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மிகப்பெரிய கதாநாயகன் ஆக முடியவில்லையே என்கிற கவலை
விஷ்ணுவுக்கு இருந்து வந்துள்ளது. இதனால் விஷ்ணு – ரஜினி திருமண வாழ்க்கையில் பிரச்சனை
எழுந்துள்ளது. இதன் பிறகு சுமூகமாக பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்த ரஜினி கடந்த
ஆண்டே விஷ்ணுவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் விஷ்ணு – ரஜினி ஜோடிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த தகவலை விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனிடையே விஷ்ணு – ரஜினி இருவரையும் சேர்த்து வைக்க கடைசி வரை இரு வீட்டாருமே முயற்சி செய்துள்ளனர். ஆனால் இருவரும் பிரிய வேண்டும்என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே ராட்சசன்
படத்தில் நடித்த போது நடிகை அமலா பாலுடன் நடிக்கும் வாய்ப்பு விஷ்ணுவுக்கு கிடைத்துள்ளது.
அமலா பாலும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பதால் அவர் தன்னுடைய அனுபவங்களை விஷ்ணுவிடம்
பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் விஷ்ணுவும் விவகாரத்து முடிவில் உறுதியாக
இருந்து மனைவி ரஜினியை பிரிந்ததாக சொல்லப்படுகிறது.