தோசை கிங்! நியுயார்க் டைம்ஸ்சால் பாராட்டப்பட்டவர்! பெண் ஆசையால் வீழ்ந்தவர்! அண்ணாச்சியின் வாழ்க்கை சொல்லும் பாடம்!

அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் இதழால் தோசை கிங் என்று பாராட்டப்பட்டவர் சரவண பவன் அண்ணாச்சி.


கடந்த 2014ம் ஆண்டு சரவண பவன் குறித்து நியுயார்க் டைம்ஸ் இதழ் மிகப்பெரிய கட்டுரை ஒன்றை எழுதியது. அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள சரவண பவன் ஓட்டலுக்கு நேரடியாக சென்று நியுயார்க் டைம்ஸ் செய்தியாளர் இந்த கட்டுரையை எழுதியிருந்தார்.

அப்போது சரவண பவன் கிச்சனில் பிரிட்ஜ் கூட கிடையாது என்று கூறியிருந்தார். இதன் மூலமே சமைக்க பழைய பொருட்களை சரவண பவன் பயன்படுத்துவதில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் கிச்சன் அவ்வளவு சுத்தமாக இருந்ததாகவும் அதே சுத்தம் சென்னையில் உள்ள சரவண பவனில் இருந்ததாகவும் அந்த கட்டுரையாளர் கூறியிருந்தார். இதன் மூலமாக சரவண பவன் அண்ணாச்சியை தோசை கிங் என்று அந்த நியுயார்க் டைம்ஸ் இதழ் பாராட்டியிருந்தது.

மேலும் சரவண பவன் உணவகத்தை இந்தியாவின் மெக் டொனால்ட்ஸ் என்று சிலர் குறிப்பிட்டதாகவும் தவறாமல் கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற இதழால் பாராட்டப் பட்டிருந்தாலு பிறன் மனை நோக்கிய ஒரே காரணம் தான் ராஜகோபாலை தற்போது இந்த அளவிற்கு கீழ் நிலையில் மரணம் அடைய வைத்துள்ளது.

ஒழுக்கம் குறித்து தன்னுடைய ஊழியர்களுக்கு வாய்கிழிய ராஜகோபால் பாடம் எடுப்பாராம். ஆனால் அப்படிப்பட்ட ஊழியர்களில் ஒருவரின் மகளை தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்தியதால் தான் ராஜகோபால் மரணம் இவ்வளவு மோசமாக இருந்துள்ளது.

இதன் மூலமாக வாழ்வில் ஒழுக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ராஜகோபாலின் வாழ்க்கை நமக்கு அழுத்தமாக பதிய வைத்துவிட்டு சென்றுள்ளது.