ராகுல் காந்தியை எதிர்த்துநின்ற வேட்பாளர் இப்போது ஜெயிலில்! எல்லாம் பினராயி விஜயன் செயல்!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.


அவரை எதிர்த்து பிஜேபியின் தலைமையிலான என்.டி.எவின் சார்பாக நிறுத்தப்பட்டவர் துஷார் வெள்ளப்பள்ளி.இவர் கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வருகிறார்.இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் ஐக்கிய அரபுக் குடியரசின் நாட்டைச் சேர்ந்த அஜ்மானில் கட்டிட நிர்மான நிறுவனம் நடத்தி வந்தார்.

இவரது நிறுவனத்தில் திருச்சூரைச் சேர்ந்த நாசில் அப்துல்லா என்பவர் காண்டிராக்டராக இருந்தார்.துஷார் வெள்ளாப்பள்ளியின் நிறுவனம் நஷ்டமடைந்ததால் அவர் தன் கம்பெனியை மூடினார்.அப்போது காண்டிராக்டர் நாசில் அப்துல்லாவுக்கு கொடுக்க வேண்டிய 19 கோடி ரூபாய்க்கு செக் கொடுத்து விட்டு இந்தியா திரும்பிவிட்டார்.

இது தொடர்பாக துஷார் வெள்ளாப்பள்ளிக்கும்,நாசில் அப்துல்லாவுக்கும் மோதல் இருந்து வந்தது.இந்த நிலையில் நாசில் அப்துல்லா அஜ்மான் போலீசில் தன்னை வெள்ளாப்பள்ளி ஏமாற்றி விட்டதாகப் புகார் கொடுத்தார்.செக் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு பவுன்ஸான செய்தியை சொல்லாமல் சமாதானம் பேச துஷார் வெள்ளப்பள்ளியை அஜ்மானுக்கு வரவழைத்தார் நாசில் அப்துல்லா.

அஜ்மான் விமான நிலையத்தில் இறங்கிய உடனே வெள்ளாப்பள்ளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபரம் மறுநாள்தான் அவரது உறவினர்களுக்குத் தெரிய வந்தது.வெள்ளப் பள்ளியின் தந்தையும் ஈழவ அமைப்பான எஸ்.என்.டி.பியின் தலைவருமான வெள்ளாப்பள்ளி நடேசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை அனுகி கோரிக்கை வைத்தார்.

உடனே கேரள முதல்வர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைத்தார்.இதற்கிடையே கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபரும், ஐக்கிய அரபு குடியரசில் வசிப்பவருமான யூசுப் அலி , அஜ்மான் நாட்டு  நீதிமன்றத்தில் ஒரு லட்சம் திர்ஹாம் ஜாமீன் கொடுத்து துஷார் வெள்ளாப்பள்ளியை ஜாமினில் வெளிக் கொண்டு வந்து விட்டார்.

இது தொடர்பாக ஆறிக்கை விட்டு இருக்கும் கேரள மாநில பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை சதித் திட்டம் தீட்டு வெள்ளாப்பள்ளியை கைது செய்ததாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.எப்படியோ ராகுலை எதிர்த்து போட்டியிட்ட என்.டி.எ வேட்பாளரை காப்பாற்ற கம்யூனிஸ்டுகளின் உதவியை நாடியதை கேரள பிஜேபி வசதியாக மறந்து விட்டது.பிஜேபி வேட்பாளரை காப்பாற்றிய யூசுப் அலி ஒரு இஸ்லாமியர் என்பதையும் சேர்த்து.