இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் திடீர் மாற்றம்! புதியவர்கள் அறிவிப்பு!

இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நாம் எதிர்பார்த்தது படி அல்லாமல் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.

நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே வேட்பாளரை அறிவித்து உள்ளது. அதன்படி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக நாமக்கல் தொகுதியில் ஈஸ்வரனுக்கு பதிலாக சின்ராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தேர்தல்கள் ஆக கொங்குநாடு மக்கள் கட்சியின் வேட்பாளராக ஈஸ்வரனே களம் இறங்கி வந்தார். இதனால் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சியில் இருந்ததாகவும் அதனை களையும் பொருட்டு தற்போது எனக்கு ஈஸ்வரன் வாய்ப்பு வழங்கி உள்ளதாக கூறுகிறார்கள்.

இதேபோல் அதிமுக கூட்டணியில் ஜி கே வாசன் இன் தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை தொகுதியில் போட்டியிடுகிறது. தஞ்சை தொகுதியில் அக்கட்சியின் சார்பில் ஜிகே வாசனை களமிறங்குவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ஜி கே வாசன் வேட்பாளராக அறிவிக்கப் படவில்லை.

யாரும் எதிர்பாராத வகையில் தஞ்சை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் இரண்டு திடீரென வேட்பாளர்களை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.