திருமணம், முதலிரவுக்கு தடை! தவிக்கும் இந்திய மணமகன் - பாகிஸ்தான் மணமகள்!

போர் பதற்றம் காரணமாக, இந்திய-பாகிஸ்தானிய மணமக்களின் திருமணம் தடைபட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜேக்கா பாரில் வசிப்பவர் மகேந்திர சிங். இவருக்கும், பாகிஸ்தானில் உள்ள சினோய் பகுதியில் வசிக்கும் சாஹன் என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.

ஆனால், திடீரென புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல், அபிநந்தன் சிறை பிடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. 

இந்த காரணத்தால், மகேந்திர சிங்கின் திருமணமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இதுபற்றி, பெண் வீட்டாரிடம் பேசி திருமணத்தை தள்ளி வைக்கக் கோரிய மகேந்திர சிங் வீட்டார், தங்கள் உறவுக்காரர்களை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்வதற்காக புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை கேன்சல் செய்தும் உள்ளனர். 

பாகிஸ்தானில் உள்ள மணமகள் வீட்டாரும் இந்த சூழலைப் புரிந்துகொண்டு காத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் எத்தனை நாள் காத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், எப்போது போர் பதற்றம் தணிந்து, சுமூக நிலை ஏற்படும் என்றும், தனக்கு எப்போது திருமணம் ஆகும் என்றும் தெரியாமல் வேதனையில் வாடுவதாக, மணமகன் மகேந்திர சிங் கூறியுள்ளார். விரைவில் இந்நிலை மாறி, சாஹனை கைப்பிடிப்பேன் எனவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

திருமணம், முதலிரவு என்கிற கனவுகளுடன் இருந்த ஜோடிக்கு இந்தியா ’- பாக் பதற்றம் தொல்லையை தரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.