அமேசானின் த ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்! 10 எபிசோடும் சும்மா பரபரனு ஓடுது! அடுத்த சீசன் எப்போ பாஸ்?

இந்தி வெப் சீரீஸ்-ல நான் இதுக்கு முன்ன பார்த்தது ரெண்டுதான். ஒன்னு மிர்சாபூர். இன்னொன்னு சேக்ரட் கேம்ஸ். இதோ மூணாவதா The Family Man. இதுல முக்கியமான விஷயம் மூணுல இதுதான் பெஸ்ட்.


ஆரம்பிச்ச முதல் பத்து நிமிஷத்துலயே உள்ள இழுத்துருச்சி. அதோட டெம்போ கொஞ்சம் கூட குறையாம, பத்து எபிசோட்லயும் சும்மா நின்னு விளையாடி இருக்கானுங்க. இதோட சிறப்பம்சங்கள் ஒவ்வொண்ணா பார்க்கலாம்.

1. கதை ரொம்ப முக்கியமான பங்கு வகிக்குது. தினமும் நியூஸ் பேப்பர்ல வர்ற செய்திகளோட தொகுப்புதான் இந்த சீரீஸ்-ன்னு அவங்களே சொல்றதால, படத்துல நிறைய பரிச்சியமான விஷயங்களை பார்க்கமுடியுது.

ஏற்கனவே பல முறை சொல்லப்பட்ட அதே தீவிரவாதி, பாம், உளவாளிகள் கதைதான்னாலும் கூட அதுல நடுவுல ஒரு குடும்பத்தையும் கொண்டுவந்து, வேலைக்கும், குடும்பத்துக்குமான அந்த இடைவெளியை, அதனால ஏற்படுற சின்ன சின்ன விளைவுகளை அவ்ளோ இயல்பா சொல்லியிருக்காங்க.

2. பாத்திர தேர்வுகள். மாநிலத்துக்கு ஒருத்தர்ன்னு செலக்ட் பண்ண மாதிரி, தமிழ்ல இருந்து ப்ரியாமணி, கிஷோர், தெலுங்குல இருந்து சந்தீப் கிஷன், மலையாளத்துல இருந்து நீரஜ்-ன்னு ஏகப்பட்ட பழக்கமான முகங்கள். அதுபோக நாயகனா என்னோட பேவரைட் சர்தார் கான் மனோஜ் பாஜ்பாய். அட்டகாசமான நடிகர்.

சும்மா வாழ்ந்திருக்காரு. அவரோட ஒன்லைனர் எல்லாம் அதகளம். குறிப்பா ஒரு சேசிங் சீன்ல இவர் ஸ்கூட்டர்ல லிப்ட் கேட்குற விதமும், அந்த குற்றவாளியை நெருங்குனதும் இவர் பேசுற வசனங்களும் சிரிச்சிட்டே இருக்கலாம். 

3. கதை பயணம் பண்ற இடங்கள். குறிப்பா காஷ்மீர், பலுச்சிஸ்தான் ஏரியால எல்லாம் நாம பார்க்காத பல இடங்கள் மற்றும் தளங்கள்ல நடக்குற சம்பவங்கள் எல்லாம் ப்ரெஷா இருக்கு. அது சீரீஸோட பெரிய பலம். அதேமாதிரி நாட்டுல ஒரு பிரச்சினை, வீட்டுல வேற மாதிரி பிரச்சினை, ரெண்டும் சில இடங்கள்ல ஒரே இடத்துல கனெக்ட் ஆகுறது, அதனால வர்ற குழப்பங்கள், டென்ஷன் எல்லாமே கரெக்ட்டா பேலன்ஸ் பண்ணியிருந்தாங்க.

4. சும்மா இந்த சீரீஸ் ஒரு பக்க நியாயத்தை பேசுதுன்னு யாரும் சொல்லக்கூடாதுன்னு ரொம்ப கவனமா திரைக்கதை அமைச்சிருக்காங்க. ஒரே நாள்ல காஷ்மீருக்கு ஒரு உளவாளி, ஒரு தீவிரவாதி ரெண்டு பேரும் போறாங்க. அவங்க அங்க இறங்குனதும் பேசுற சில வசனங்கள் கவனிங்க. காஷ்மீர் மக்களும், நம்ம ராணுவமும் எப்படி காஷ்மீரை பார்க்குறாங்கன்னு புரிஞ்சிக்கலாம்.

ஏண்டா அதுக்குள்ள முடிச்சாங்கன்னு கடைசியில ஆயிருச்சு. ஏன்னா அப்படி ஒரு பெரிய திருப்பதோட கதை முடிஞ்சிருக்கு. அடுத்த சீசன் எப்போன்னு இப்ப இருந்தே தேவுடு காக்க ஆரம்பிக்க வேண்டியதுதான். 

மறக்காம பாருங்க. சேர்ந்து காத்திருக்கலாம்.

நன்றி: பாலகணேஷ்.