எடப்பாடி ஆட்சியை ஆட்டம் காண வைத்த அந்த ஒன்றரை நிமிடம்! உச்சநீதிமன்ற திக் திக்!

உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த ஒரு உத்தரவு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது.


எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி சபாநாயகர் மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் தனபால்.

இந்த நோட்டீசை எதிர்த்து, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே, அவர் தங்களுக்கு எதிராகத் தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவை பிறப்பிக்க கூடாது என்று எம்எல்ஏக்கள் கோரியிருந்தனர்.

இதனை அடுத்து வழக்கு   நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 3 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சட்டப்பேரவை செயலர் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

சுமார் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இந்த விசாரணை நடைபெற்றது. ஒன்றரை நிமிடங்களுக்குள்ளாக நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துவிட்டு அடுத்த வழக்குவிசாரணைக்கு சென்றுவிட்டனர். அந்த ஒன்றரை நிமிடங்கள் எடப்பாடி அரசை ஆட்டுவிப்பதாக அமைந்துவிட்டது.