SRM பல்கலையா அல்லது தற்கொலை மையமா? உண்மையை கண்டுபிடிக்க களம் இறங்கிய CBCID போலீஸ்!

உலகப்புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படித்தால், தங்கள் பிள்ளைக்கு எளிதில் வேலை கிடைக்கும், வாழ்க்கை நிம்மதியாக நகரும் என்றுதான் எண்ணி அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள்.


உலகப்புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படித்தால், தங்கள் பிள்ளைக்கு எளிதில் வேலை கிடைக்கும், வாழ்க்கை நிம்மதியாக நகரும் என்றுதான் எண்ணி அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால், இங்கு மாணவர்களுக்கு ஏராளமான நெருக்கடி நிலவுகிறது என்பதுதான் புகார். 

கடந்த மே 26 அனுபிரியா என்ற மாணவி 10வது மாடியில் இருந்து விழுந்து உயிரை இழந்தார். இதையடுத்த தினமே, அதாவது மே 27 அன்று அனித் சவுத்ரி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் ஜூலை 15ம் தேதி தர்ஷன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். 

இதுபோன்ற தற்கொலைகள் நடக்கும்போது போலீஸ் நிலையத்தில் இருந்து யார் அந்த மாணவர், என்ன பிரச்னை என்றெல்லாம் விளக்கமாக செய்தி கொடுப்பார்கள். ஆனால், எஸ்.ஆர்.எம். பல்கலையில் மட்டும் யார் செத்தாலும் அதுகுறித்து எந்தத் தகவலும் யாரும் அறிந்துகொள்ள முடியாது.

மிகப்பெரும் சேனலாக, கல்வி வள்ளலாக இருப்பதால், அவரை பகைத்துக்கொள்ள வேறு எந்த மீடியாவும் முன்வருவதில்லை. இந்த நிலையில்தான் அதிசயமாக இன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தற்கொலைகள் குறித்து இனி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடக்கும் என்று புதிய டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு போட்டிருக்கிறார். இனியாவது அங்கு மாணவர்களுக்கு எப்படிப்பட்ட அழுத்தங்கள் இருக்கிறது என்ற உண்மை வெளிவரட்டும், தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படட்டும்.