நடுரோட்டில் நயன்தாராவுடன் ரஜினி..! வைரலாகும் புகைப்படம்! எங்கு தெரியுமா?

நடிகர் ரஜினியும் நயன்தாராவும் நடு ரோட்டில் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.


தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மும்பையில் நடைபெற்ற போது படப்பிடிப்பு காட்சிகள் வீடியோவாகவும், போட்டோக்களாகவும் வெளியாகின.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்போனுக்கு முருகதாஸ் தடை விதித்தார். இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட சில காட்சிகள் புகைப்படங்களாக லீக் ஆகியுள்ளன.

சாலையில் காக்கி யூனிபார்மில் ரஜினி ஸ்டைலாக நிற்க அவருடன் நடிகை நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார். பார்க்க நயன்தாரா பதற்றத்துடனும் ரஜினி டென்சனாகவும் இருப்பது போல் அந்த புகைப்படம் இருக்கிறது.

ராஜஸ்தானில் எந்த இடத்தில் இந்த காட்சி படமாக்கப்படுகிறது என்று தெரியாத நிலையில், நடு ரோட்டில் படமாக்கப்படுகிறது என்பது மட்டும் புகைப்படங்களை பார்க்கும் போது தெரிகிறது.

ரஜினி புகைப்படம் வெளியானாலே வைரல் ஆகும். கூட நயன்தாராவும் இருந்தால் கேட்கவா வேண்டும். செம வைரல் தான்.