செங்கோட்டையனுடன் தன்ஷிகா! விஜயபாஸ்கருடன் காயத்ரி! களைகட்டிய யோகா தினம்!

உலக யோகா தினத்தை முன்னிட்டு நடிகைகளுடன் இணைந்து அமைச்சர்கள் யோகா செய்ததால் களைகட்டியது.


யோகா தினத்தை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். மேலும் மருத்தவ கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், நர்சுகள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டது தான். அமைச்சருடன் மேடை ஏறிய காயத்ரி ரகுராம் யோகா செய்ததுடன் மாணவர்களிடமும் கலந்துரையாடினார்.

இதே போல் சென்னை நந்தனத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அமைச்சர் செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

அத்துடன் நடிகை சாய் தன்ஷிகாவும் தமிழக அரசின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்து அசத்தினார். அமைச்சர் செங்கோட்டையன் அருகே நின்று கொண்டு தன்ஷிகா செய்த யோகா தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.