100 ஆண்டுகளாக இருக்கும் 2ஆயிரம் வீடுகள் இடிப்பு! ஸ்மார்ட் சிட்டியாகும் தஞ்சையின் பரிதாபம்!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சை உள்பட பல மாநகராட்சிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மத்திய அரசு ஒருங்கிணைக்கவுள்ளது.


இந்த திட்டத்தின்படி வளர்ச்சிப் பணிகள், சுகாதார வசதிகள், சாலை வசதிகள் மேம்படுத்தப்படுத்த தேவையான நிதி மத்திய அரசினால் வழங்கபடும் என  அறிவித்தது .ஆனால், மத்திய அரசு அறிவித்தபடி  எந்த நகரமும் இன்றளவில் ஸ்மார்ட் சிட்டி தரத்தை அடையவில்லை.

தஞ்சாவூர் மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கு  ஒதுக்கபட்டுள்ளதால், இங்கு ஆரம்ப  பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி பணிக்காக ஏற்கனவே இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்த நிலையில் அடுத்த கட்டமாக  மேல அலங்கம், செக்கடி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்படுகின்றன.

இதற்காக அங்கு 100 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்த முயற்சி செய்வதற்காக  நேற்று மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பட்டா விவரங்களைக் கேட்டு அணுகியதாக கூறப்படுகிறது. பட்டா இல்லாததால் வீடுகளை காலி செய்யுமாறு கூறியதை அடுத்து, அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்த  தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம்  பொதுமக்ககளிடம் சமாதானம் கூறி, இதுகுறித்து மாநகராட்சியில் முறையான காரணம்  கேட்கப்படும் என நம்பிக்கை அளித்ததால்,  மறியல் கைவிடப்பட்டாலும் தொடர்ந்து அந்த பகுதியில்  பதற்ற நிலை நிலவிவருகிறது.