ரஜினியைப் பற்றி இனிமே பேசுறதுக்கு என்ன இருக்கு..? தமிழருவிமணியன் வருத்தம். அடுத்து சீமானை பாராட்டுவாரா…?

வைகோவை விட்டால் தமிழகத்துக்கு வேறு விடிவே இல்லை என்று ஆணித்தரமாக அடித்துச் சொன்னவர் தமிழருவி மணியன். அதன்பிறகு கடந்த தேர்தலில் விஜயகாந்தை விட்டால் தமிழகத்துக்கு வழி இல்லை என்று சொன்னார்.


இந்த இரண்டும் ஊத்திக்கிச்சு. அதனால் அடுத்தபடியாக ரஜினியை விட்டால் வேறு யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவந்தார் தமிழருவி மணியன்.

திடீரென கடந்த திங்களன்று மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்தபிறகு, அவரது அரசியல் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று ரஜினியை சந்தித்துப் பேசினார் தமிழருவி மணியன்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘அதுகுறித்து ரஜினிதான் சொல்ல வேண்டும். உடல்நிலையைக் கருத்தில்கொண்டு முடிவு எடுக்கும்படி சொல்லியிருக்கிறேன்’ என்று விரக்தியான குரலில் பேசினார்.

மேலும் சில செய்தியாளர்கள் ரஜினி குறித்து அவரிடம் போனில் தொடர்புகொண்டபோது, ‘இனிமே ரஜினியைப் பற்றி பேசுவதற்கு என்ன இருக்குது…’ என்று வைத்துவிட்டாராம்.  இதுக்கெல்லா கலங்குனா என்னாகுறது தமிழருவி சார். அடுத்து சீமான்னு ஒருத்தர் இருக்கிறார். அவரைப் பிடிங்க.