எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டும் தமிமுன் அன்சாரி. வண்ணாரப்பேட்டை போராட்டம் தீவிரம் ஆகிறதா..?

சட்டப்பேரவையில் காவல் துறையினர் மீது கல், பாட்டில் வீசி காயம் ஏற்படுத்தியதாக போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது கருத்துக்கு இஸ்லாம் இயக்கங்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.


இதுகுறித்துப் பேசிய தமிமுன் அன்சாரி, ‘‘எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவலை சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி பற்றி புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இஸ்லாம் மக்களுக்கு எந்த ஆபத்தும் நேர அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் முதல்வர், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறார்.

ஆனால், எந்தக் காரணம் கொண்டும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து இஸ்லாம் இயக்கங்களும் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.