தமிழச்சிக்குப் போட்டி கனிமொழி தான்! தெறிக்கவிட்ட ஜெயக்குமார்!

தென் சென்னை தொகுதியில் அழகான வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும், ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும் போட்டியிடுகிறார்கள்.


தமிழச்சி தீவிரமாக ஓட்டு வேட்டையாடிவந்தாலும், ஜெயவர்தனோ ஐ.டி. பார்ட்டி மாதிரி நேரம், காலம் பார்த்து பிரசாரம் செய்கிறார். ஆனாலும், அவரது அப்பா ஜெயகுமார், மகனின் வெற்றியில் படு உறுதியாக இருக்கிறார்.

அதெப்பாடி இப்படி கூலாக இருக்கிறீர்கள் என்று கேட்டால், மீனவர்கள், மாணவர்கள், பெண்கள் எங்கள் பக்கம் என்கிறார் ஜெயகுமார். அப்போதுதான் தமிழச்சி தங்கப்பாண்டியன் கடுமையாக உழைக்கும்போது, அவருக்குப் போட்டியாக ஜெயவர்தன் உழைக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ஜெயகுமார், தமிழச்சிக்குப் போட்டி யாருன்னு தெரியுமா? அது என் பையன் இல்லீங்க, கனிமொழிதான் போட்டி. தமிழச்சிக்கு சீட் தரக்கூடாது, ஜெயிக்கக்கூடாதுன்னு கனிமொழிதான் நினைப்பாங்க. ஏன்னா, அவங்க ஜெயிச்சு வந்துட்டா, கட்சியில முக்கிய இடத்துக்கு வந்திடுவாங்கன்னு பயம்தான் என்று தெறிக்க விடுகிறார் ஜெயகுமார்.

இப்போது தமிழ்ச்சி தங்கபாண்டியனுக்கு ஓட்டு சேகரிப்பதற்காக எழுத்தாளர்கள் மற்றும் சினிமாகாரர்களை களத்தில் இறக்க படு ஸ்பீடாக வேலைகள் நடந்துவருகிறதாம். இதைப் பார்த்து அ.தி.மு.க.வில் விந்தியாவை களமிறக்க இருக்கிறார்களாம். ஆக, தென்சென்னை மக்களுக்கு இனிமேல் ஜாலிதான்.