தம்பிதுரையை அலறவிட்ட ரெய்டு! டெல்லியும் சென்னையும் ஸ்விட்ச் ஆஃப்! பதற்றத்தில் அதிமுக!

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர் தம்பிதுரை. இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் ஜோதிமணி நிற்பதால் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தார்.


அந்த நிலையில் இன்று காலையில் தம்பிதுரைக்கு நெருக்கமான நபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. குறிப்பாக வையம்பட்டி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சேது, கரூர் என்.எஸ்.என்.கல்லூரி அதிபர் செல்வம் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்றது.

இந்த ரெய்டில் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது கடைசி கட்டத்தில் தம்பிதுரை வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த பணமாம். தம்பிதுரை ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காக டெல்லியும், சென்னையும் கூட்டாக சேர்ந்து இந்த ஆபரேஷனை நடத்தியதாகச் சொல்கிறார்கள்.

ஏனென்றால் கூட்டணி சேர்வதற்கு முந்தைய தினம் வரையிலும் பா.ஜ.க. கட்சியை கடுமையாக எதிர்த்துவந்தார் தம்பிதுரை. அதனால் அத்தன பா.ஜ.க. நிர்வாகிகளும் கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால், வேறு வழியில்லாமல் சீட் கொடுக்கப்பட்டது.

இன்று ரெய்டு நடப்பது தெரியவந்ததும் டெல்லி பா.ஜ.க. தலைவர்களுக்கும், செனை பா.ஜ.க. தலைவர்களுக்கும் போன் செய்து, ரெய்டை நிறுத்தும்படி கெஞ்சுவதற்கு போன் போட்டாராம். சொல்லி வைத்தது போன்று யாருமே தம்பிதுரை போனை எடுக்கவில்லை. அடுத்த முறை போன் செய்தபோது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துவிட்டதாம்.

கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்று நொந்துபோய் இருக்கிறார் தம்பிதுரை. ஆக, ஜோதிமணிக்கு யோகம்தான்.