மில்க்கி பியூட்டி தமன்னாவுக்கு ரூ.5 கோடி..! ஒன் டைமில் செட்டில்மென்டை முடித்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி..! எதுக்கு தெரியுமா?

லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டு தமன்னா திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்த படத்திற்கு தமன்னாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.31 வயதை தொட்டுவிட்ட தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கனவுக் கன்னி தமன்னா பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்தால் உடனே திருமணம் என கூறி வந்தார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதால் திருமணத்தை தள்ளிப் போடுவதாகவும் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் திருமண பந்தத்தை நோக்கி தமன்னா செல்வது உறுதியாகி உள்ளது. முன்னதாக நயன்தாரா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை தனக்கு கதாநாயகியாக நடிக்குமாறு அருள் கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியில் அந்த வாய்ப்பை தன்வசம் ஆக்கிக்கொண்ட தமன்னாவுக்கு ஆடிக்காற்றில் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

எனவே பொருத்தமான மாப்பிள்ளை யாராவது இருந்தால் இப்போது முதலே தமன்னாவிடம் விண்ணப்பிக்கலாம் என சினிமா வட்டாரங்கள் வேதனை கலந்த சந்தோஷத்துடன் சொல்கிறது.