தளபதி 63 விநியோக உரிமை! பேரம் பேசும் நயன்தாராவின் திரையுலக பினாமி!

இளையதளபதி விஜயின் 63வது திரைப்படத்தின் உரிமையை பெறுவதற்கு இரு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.


தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் இயக்குனர் அட்லியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஜாக்கி செராப், மதயானைக்கூட்டம் கதிர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தில் இணைந்துள்ளன. மெர்சலை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பானது விறுவிறுப்பாக ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் தமிழக உரிமமானது எழுபது கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஸ்க்ரீன் சீன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதில் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடிகை நயன்தாராவின் பினாமி என்று சொல்லப்படுகிறது. நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் படத்தை தயாரித்தது இந்த நிறுவனம் தான். இதே போல் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் படத்தின் விநியோக உரிமையையும் இந்த நிறுவனம் தான் வாங்கியது.

தற்போது விஜய் படத்தின் விநியோக உரிமையையும் வாங்க கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் முயற்சிக்கிறது. தனது பினாமி நிறுவனத்திற்கு எப்படியாக தான் நடிக்கும் படத்தை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துடன் நயன்தாரா பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது.