பொங்கல் மாஸ் ரிலீஸ்! தர்பாருடன் போதும் தளபதி 64!

விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 63' வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.


இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்துக்கு தற்காலிகமாக தளபதி 63 என்ற தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். இப்படத்தில் விவேக்,இந்துஜா யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் இந்திய மகளிர் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' இப்படமானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' படமும் வரும் பொங்கல் அன்று வெளியிடப்படும் என தெரிகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.