கடற்கரையில் நிர்வாணமாக வலம் வந்த பெண்கள்! காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க!

கடற்கரையில் நிர்வாண உலா; பலரின் கண்களுக்கு விருந்தளித்த இளம் பெண்கள் காவல்துறையில் சிக்கினர்


தாய்லாந்து கடற்கரையில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த இளம் பெண்களை வளைத்துப் பிடித்த காவல்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் கடற்கரையில் 17 முதல் 20 வயதுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிர்வாணமாக  கடலில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் பல பெண்களும் அடக்கம். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வட்டார மக்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். காவல்துறை வந்து பார்த்த போது அவர்களின் ஜலக்கிரீடை உச்சத்தில் இருந்தது. அனைவரையும் சுற்றி வளைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அனைவரும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து. மேலும் அனைவரும் உச்சபட்ச மது போதையில் இருந்தனர். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அனவருக்கும் தலா 13 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 

திங்கட் கிழமையன்று பார்கள் விரைவில் மூடப்பட்டதால் அவர்கள் ஆட்டம் போட கடற்கரைக்குச் சென்றது தெரியவந்ததாகவும், தவறுக்கு மன்னிப்பு கோரி எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவதில்லை என அவர்கள் உறுதியளித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.