நித்யாவுக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் கொடுத்தார்கள்! மனைவி குறித்து தாடி பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோரது குடும்ப பஞ்சாயத்து கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.


இவர்களது குடும்ப பிரச்சனை தற்போது வெட்டவெளிக்கு வந்து பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒருமனதாக கலந்து கொண்டாலும் பாலாஜியின் மனைவி நித்யா அவருடன் சேரும் எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என்று பலரும் நினைத்தனர்.

 அதேபோல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பாலாஜியை பிரிந்து சென்று, பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நித்யாவிற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை கூறியுள்ளார் தாடி பாலாஜி 

இதுகுறித்து அவர் கூறியதாவது  நித்தியா ஒரு பெண்ணே கிடையாது. அவர் சாக்கடையில் விழுந்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதற்காக அவருக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் தன்னை வாழ வைத்த விஜய் டிவியையே அவர் மோசமாக பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பாலாஜி.

அதாவது ஒரு நாள் பிக்பாஸ் வீட்டில் இருக்க நித்யாவுக்கு ரூபாய் 4 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு லட்சம் ரூபாய என்று?