அந்த 2 நடிகர்களும் என்னை விடவே மாட்டார்கள்! 47 வயது நடிகை சொல்லும் செம காரணம்!

தபூ ஒரு இந்திய திரைப்பட நடிகை. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவர் சல்மான் கான் மற்றும் அஜய் தேவ்கனுடன் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் அஜய் உடன் "ஹகீகத், தக்ஷாக், டிரிஷயம், கோல்மால்" எனும் படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது "டி டி பியார் டி"என்ற படத்தில் அஜய் தேவ்கனின் முன்னாள் மனைவியாக நடித்துள்ளார்.

பின் சல்மான் கானுடன் "பீவி எண் 1, ஹம் சாத்-சாத் ஹைன், ஜாய் ஹோ" என்ற பட்ஙகளில் இணைந்து நடித்துள்ளார்.இவர் தற்போது வெளிவர இருக்கின்ற "பாரத்"எனும் படத்தில் நடித்துள்ளார்.

தபூ பிரஸ்மீட்டின் போது சல்மான் கான் மற்றும் அஜய் தேவ்கனுடன் அவரது உறவைப் பற்றி கூறினார். அப்போது நானும் அஜய் தேவ்கனும் தற்போது வரை ஒரு குடும்ப உறுப்பினர்களை போலத்தான் பழகுகிறோம். இதே போல் சல்மான் கானுடனும் நான் ஒரு குடும்ப உறுப்பினரை போலத்தான் பழகுகிறேன்.

எனவே என்னை அந்த இருவரும் ஒரு போதும் கைவிட்டுவிடமாட்டார் என்று நம்புகிறேன். அஜய் தேவ்கன் போல் ஒருவரை திருமணம் செய்ய நினைத்தேன். அது முடியாத காரணத்தினால் தற்போது வரை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வாறு தபூ கூறியுள்ளார்.