ஆண்கள் கற்பழிக்கும் போது பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்! கையோடு காண்டம் வைத்திருக்க வேண்டும்! சினிமா இயக்குனரின் விபரீத யோசனை! யார் தெரியுமா?

ஐதராபாத்: பலாத்காரம் செய்யப்படும் முன்பாக, மறக்காமல் காண்டம் அணியுங்கள் என்று, பெண்களுக்கு சினிமா இயக்குனர் ஒருவர் டிப்ஸ் அளித்துள்ளார்.


கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் இரவில் தனியாகச் சென்றபோது, லாரி டிரைவர் மற்றும் அவரது உதவியாளர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். இதுதவிர, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சமீப காலமாக, அதிகளவில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது. இதையொட்டி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி பலரும் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.   

இந்நிலையில், தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவர் முட்டாள்தனமாக ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். டேனியல் ஷ்ராவன் என்ற அந்த டைரக்டர் வெளியிட்ட அந்த பதிவில், ''இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேலான பெண்களிடம், பாலியல் பலாத்காரத்தை எப்படி எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் பலாத்காரத்தை ஒழிக்க சட்டங்கள் எதுவும் உதவாது. இதற்கு பெண்களுக்கு உரிய பாலியல் கல்வி புகட்டப்பட வேண்டும். செக்ஸ் தேவை நிறைவேறாவிட்டால்தான் ஆண்கள் கொலை செய்வார்கள். எனவே, பெண்கள் எப்போதும் கையில் காண்டம் வைத்திருக்க வேண்டும். தங்களை யாரேனும் பலாத்காரம் செய்ய வந்தால், அதற்கு முழு ஒத்துழைப்பை பெண்கள் தர வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக, பாலியல் பலாத்காரம் சுமூகமாக நடைபெற்று முடியும் என்பதோடு, ஆண்கள் யாரும் கொலை செய்ய மாட்டார்கள். இப்படித்தான் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பதுபோல, முட்டாள்தனமாக இப்படி ஒரு கருத்தை பகிர்ந்த அந்த சினிமா இயக்குனருக்கு பல தரப்பிலும் கண்டனம் குவிந்து வருகிறது. இதற்கிடையே, தனது ஃபேஸ்புக் பதிவை அந்த அறிவாளி டெலிட் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

சினிமா இயக்குனரின் இந்த கருத்தால் பாடகி சின்மயி மற்றும் நடிகை குப்ரா சேட் கொதித்து எழுந்துள்ளனர்.