திடீரென பார்வையாளரின் கன்னத்தை கடித்து அதிர வைத்த பிரபல டிவி தொகுப்பாளினி! யார், ஏன் தெரியுமா?

தனியார் தெலுங்கு மொழி தொலைக்காட்சி ஒன்றில் பெண் தொகுப்பாளினி ஒருவர் பார்வையாளரின் கன்னத்தை கடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


தெலுங்கானா மாநிலத்தில் ஈடிவி பிளஸ் தொலைக்காட்சியில் படாஸ் 2 என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கான படப்பிடிப்புத் தளம் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி வர்ஷினி தொகுத்து வழங்கி வருகிறார். 

படாஸ் 2 நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு பையனை மேடைக்கு வருமாறு வர்ஷினி அழைத்தார். அவர் மேடைக்கு வந்தவுடன் அவரது கன்னத்தை கடித்து, முத்தம் கொடுத்தார் வர்ஷினி. இதனால் அந்த பையன் அதிர்ச்சி அடைந்தான். இதற்கு வர்ஷினி அந்த பையன் க்யூட்டாக இருந்ததால், முத்தம் கொடுத்ததாக கூறினார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. நிகழ்ச்சியின் டிஆர்பியை கூட்டுவதற்காகவே வர்ஷினி அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான வர்ஷினி. சந்தாமாமா கதாலு என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். லவ்வர்ஸ், பெஸ்ட் ஆக்டர்ஸ், ஸ்ரீ ராம ரக்ஷா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இதை அடுத்து வர்ஷினி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வர்ஷினிக்கு 2017ம் ஆண்டு 'அதிக பேர் விரும்பும் பெண்' எனும் விருதை கொடுத்து கவுரவித்தது ஐதராபாத் டைம்ஸ்.