வாகனங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆட்கள் பயணம் செய்தால் ஆபத்து என்பதை உணர்த்துவதற்காக தெலுங்கானா மாநில போலீசார் ஒரு விசேஷ வீடியோவை வெளியிட்டு வைரல் ஆக்கியுள்ளனர்.
ஒரு ஆட்டோவுக்குள் 6 குடும்பம்! 24 பேர்! காண்போரை மலைக்க வைக்கும் புகைப்படம் வைரல்!
தெலுங்கானா மாநிலம் புவனகிரி என்ற கிராமத்தில் திருமண நிகழ்ச்சியி பங்கேற்று விட்டு திரும்பிய ஒரு குடும்பத்தார் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். ஆனால் அது ஒரு சிறிய கிராமம் என்பதால் எப்போதாவது ஒருமுறைதான் பேருந்து போக்குவரத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோ ஆட்டுனரிடம் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சரசாரியாக ஒரு ஷேர் ஆட்டோவில் ஓட்டுநர் உள்பட 8 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழ்நிலையில் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் என 24 பேரை ஏற்றிக்கொண்டு கம்பீரமாக ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்த போலீசார் ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தபோது 24 பேர் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விபரீதம் தெரியாமல் செயல்படுவதாக ஆட்டோ ஓட்டுநரை கடுமையாக எச்சரித்த போலீசார் அபராதமும் விதித்தனர். மேலும் இந்த சம்பவத்தை படம் பிடித்த போலீசார் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவை அனைவரும் தற்போது பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து விட்டு வருகின்றனர். 24 பேரிடம் வசூலித்த ஆட்டோ கட்டணம் அரசாங்கத்திற்கு அபராதமாக சென்றுவிட்டதை எண்ணி வருந்திய ஆட்டோ ஓட்டுநர், இந்த வீடியோவை பார்த்துவிட்டு மற்றவர்கள் திருந்தப்போகிறார்களா என்ன என்று கேள்வி கேட்கிறார்.
எது எப்படியோ வைரலில் வரும் வீடியோக்களை பார்த்து மக்கள் திருந்துவார்கள் என்றால் இந்நேரம் ஒரு சாலைவிதிமீறல் கூட நடக்காது என்பதே உண்மை.