கோவில் தூணில் கடவுள் சிற்பத்திற்கு பதில் முதலமைச்சர் சிற்பம்! கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்!

ஐதராபாத்: கோயில் தூணில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முகம் செதுக்கப்பட்ட விவகாரத்தில் கண்டனம் வலுக்க தொடங்கியுள்ளது.


 தெலுங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் அவரது முகம், அங்குள்ள பிரபலமான யதாத்ரி கோயிலின் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. இது பலரும் எதிர்பாராத நிலையில் நடந்துள்ளதால், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளன.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், சந்திரசேகர ராவ், தன்னை கடவுள் போல சித்தரிக்க முயற்சிப்பதாக, விமர்சித்துள்ளன. இதுபோன்ற செயல் வன்மையாக கண்டித்தக்கது என்பது மட்டுமின்றி, விரைவிலேயே இதனை நீக்காவிட்டால், தெலுங்கானா மக்களே ஒன்று திரண்டு, அதனை அகற்றுவார்கள், என, பாஜக எம்எல்ஏ ராஜா சிங் எச்சரித்துள்ளார்.  

யதாத்ரி கோயில் தெலுங்கானாவில் உள்ள கோயில்களிலேயே மிகப் பெரியதாகும். இங்கு சமீபத்தில் நிகழ்ந்த மறுசீரமைப்புப் பணியின்போது இத்தகைய விபரீதம் ஆளுங்கட்சியினரால் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.