ஆண் நண்பனை பெண்ணாக மாற்றி திருமணம் செய்த கல்லூரி மாணவன்..! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

தெலுங்கானா மாநிலத்தில் உடன் படித்த கல்லூரி மாணவனை பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தி அவனுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது வாழ மறுப்பு தெரிவிப்பதாக இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த அபிஷேக் என்ற மாணவர்களுடன் நட்பு கிடைத்தது. இருவரும் கல்லூரி காலங்களில் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர்.

ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர். இதையடுத்து சந்தோஷ் என்பவருக்கு அபிஷேக் மீது அபரிமிதமான அன்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அபிஷேக்கின் நடை உடை பாவனை அனைத்தும் பெண்களின் நடை உடை பாவனைக்கு ஒத்துப்போவதாக இருந்துள்ள நிலையில் சந்தோஷ் அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இதை தனது நண்பரான அபிஷேக்கிடம் தெரிவித்தபோது அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து சிலநாட்கள் சென்ற நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என சந்தோஷ் கேட்டுள்ளார்.இதையடுத்து அபிஷேக்கை பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி சந்தோஷ் வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அதன்படி அபிஷேக் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு தங்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் இருவரும் தனி வீடு ஒன்று எடுத்து அதில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து அபிஷேக் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அர்ச்சனா என மாற்றி வைத்துக்கொண்டுள்ளார். சில காலங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் மது அருந்திவிட்டு அர்ச்சனாவை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும் மேலும் அர்ச்சனாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனவும் அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அர்ச்சனா திருநங்கைகள் நலச்சட்டத்திலும் காவல் நிலையத்திலும் சந்தோஷ் குறித்து புகார் அளித்துள்ளார். அதில் சந்தோஷ் தனது வாழ்க்கையை வீணடித்து விட்டதாகவும் அவன் கூறியதால் தான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தற்போது சந்தோஷ் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.