இன்னொரு சுபஸ்ரீ! ஸ்கூட்டியில் சென்ற பெண் என்ஜினியரை மோதி சிதைத்த அரசு பஸ்! பதைபதைப்பு சிசிடிவி உள்ளே!

தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஓட்டுநர் பேருந்தை இயக்கியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை ஏற்காத தெலுங்கானா அரசு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. 

தற்காலிக ஓட்டுநர்கள் போதிய பயிற்சி இன்றி பேருந்துகளை இயக்கி வருவதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபலமான தனியார் நிறுவன ஊழியரான சோகினி என்பவர் ஹைதராபாத்தில் தனது ஸ்கூட்டி வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் பஞ்சாரா ஹில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து அவர்மீது மோதியது. அது மட்டுமின்றி மோதிய பின்னரும் பேருந்து நிற்காமல் அவரை தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்று பின்னர் பேருந்து நின்றது. இந்த விபத்தில் சோகினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் பேருந்தை ஓட்டிவந்த தற்காலிக ஓட்டுநரை அடித்து உதைத்தனர். தற்காலிக ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாலேயே விபத்து ஏற்பட்டு பெண்ணின் மரணத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.