சுமார் 1,300 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பாதிப்பின்றி உயிர் தப்பினர்.
1300 பயணிகள்! உச்சி வெயில்! நடுக்காடு! பற்றி எரிந்த ரயில்! பதற வைத்த சம்பவம்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சுமார் 1,300 பயணிகளுடன் டெல்லி நோக்கி தெலுங்கானா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7.40 மணிக்கு ஹரியானா மாநிலம், அசோதி-பலப்கர் பகுதியில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்தபோது தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதாவது ரயிலின் 9வது பெட்டியின் அடிப்பகுதியில் உள்ள சக்கரத்தில் இருந்து புகையும் நெருப்பும் வந்தது. ரயிலில் தீ பரவுவது உடனடியாக பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. படிப்படியாக தீ பெட்டியின் பிரேக் பிடிக்கும் இணைப்பிலும் பரவியது.
இதனால் பொதுமக்கள் சிலர் அலறி அடித்தபடி ரயிலை விட்டு இறங்கி விட்டனர். பின்னர் ரயில்வே ஊழியர்களால் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த மார்க்கத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.