என் கையை பிடித்து இழுத்து..! எம்எல்ஏ மகன் மீது நடிகை சஞ்சனா பகீர் செ*ஸ் புகார்!

தெலுங்கு நடிகை சஞ்சனா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெலுங்கானா எம்.எல்.ஏ மகன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


தெலுங்கு படங்களில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் சஞ்சனா இவர் ஹைதராபாத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். தனது நண்பர்களுடன் சென்று அவர் அந்த விடுதியில் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டுடிருந்துள்ளனர். இதையடுத்து அந்த விடுதிக்கு வந்த தெலுங்கானா எம்.எல்.ஏ நந்தீஸ்வரர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடு என்பவரும் அவரது நண்பருடன் வந்துள்ளார்.

அதே இடத்தில் ஆஷிஷ் நடனமாடிக் கொண்டு இருக்கையில் சஞ்சனாவின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சஞ்சனா அவரது பிடியில் இருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆத்திரமடைந்த சஞ்சனா இதுகுறித்து மாதாப்பூர் காவல் நிலையத்தில் ஆஷிஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என அஞ்சி ஆஷிஷ் சில நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆஷிஷ் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே எனது எதிரிகள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவதாகவும் அதற்கு சஞ்சனாவை பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன் மேல் கொடுக்கப்பட்ட புகாரை நான் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்காக காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தன்மீது உள்ள கலங்கத்தை துடைப்பேன். எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும் எனக்கும் அவப்பேரு விளைவைக்கவே சமூக விரோதிகள் இந்த மாதிரியான செயல்களை கையாண்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.