இளம் பெண்ணுக்கு கணவன் வீட்டில் நேர்ந்த கொடூரம்! காவல் நிலையத்தில் தந்தையுடன் வந்து கதறல்!

வரதட்சணை கேட்டு கணவரும் மாமனாரும் துன்புறுத்துவதாக ஓசூரைச் சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மகன் மீது தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் மகள் ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கட்டா ராம்பாபு. இவர் ஓசூரைச் சேர்ந்த தனது நண்பரான ஆடிட்டர் கிருஷ்ணாராவின் மகன் ரகேஷ் சவுத்ரிக்கு தனது மகள் சாய் ரம்யாவை திருமணம் செய்துகொடுத்தார்.

 

கடந்த 2013-ஆம் ஆண்டு மூன்றரை கோடி ரூபாய் செலவில் திருமணம் வெகு ஆடம்பரமாக நடைபெற்றது. அதுமட்டுமன்றி கட்டாராம் பாபு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை வரதட்சிணையாக கொடுத்தார்

 

தொடக்கத்தில் எல்லாமே சரியாகத் தான் இருந்தது. தான் இவ்வளவு பணம் செலவிட்டு திருமணம் செய்ததால் தனது மகளின் வாழ்க்கை இனிமையாக அமையும் என கட்டாராம் பாபு கணக்கிட்டது தொடக்கத்தில் சரியாக இருப்பது போலத் தோன்றியது.

 

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தப்புக் கணக்காக மாறத் தொடங்கியதுதன்னம்பிக்கையோ உழைப்பின் மீது நம்பிக்கையோ இல்லாத கணவர் வீட்டுப் பிராணிகளுக்கு 4 கோடி ரூபாய் வரதட்சிணை போதவும் இல்லை.

 

அதைவைத்து வாழவும் வக்கில்லை. மனத்தால் இணையத் தெரியாத பாவிகளுக்கு பணமா பாலம் போட முடியும்? சாய்ரம்யாவின் கணவனான ராகேஷ் சவுத்ரியும் அவரது தந்தையும் ஆடிட்டருமான கிருஷ்ணாராவ் ஆகியோர் கட்டாராம் பாபுவிடம் கோடி கோடியாக பணம் கறக்க திட்டமிட்டனர்.

 

இதையடுது நினைக்கும் போதெல்லாம் இருவரும் வார்த்தைகளாலும் செயல்களாலும் மேலும் வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தத்தொடங்கியதாகக் கூறப்படுகிறதுசாய் ரம்யாவும் எவ்வளவு நாள்தான் பொறுப்பார். 

பொறுமை எல்லை மீறிய அவர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். கடந்த சில மாதங்களாக மாமனாரும், கணவரும் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்துவதாகவும் ஆபாச வார்த்தைகளால் வசை பாடுவதாகவும் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்