இளம் கல்லூரி மாணவியை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்! அதிர வைக்கும் காரணம்!

கல்லூரி மாணவியை மர்ம நபர் ஒருவர் தீயிட்டு கொளுத்திவிட்டு, தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனம்கொண்டா நகரில் கல்லூரிஇறுதியாண்டு படித்துவரும் மாணவி ரவளி தான், இந்த பாதிப்புக்கு ஆளான நபர். இவரை, மர்ம நபர் ஒருவர் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவி மீது ஒருதலைக் காதல் கொண்ட அந்த நபர், அவ்வப்போது காதலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியும் வந்திருக்கிறார். ஆனால், கல்லூரி மாணவி ரவளி நிராகரித்துவிட்டார். 

இதையடுத்து, ஆத்திரம் அடைந்த அந்த நபர், மாணவி கல்லூரிக்குச் செல்லும்போது வழிமறித்து, நடுத்தெருவில் பலர் முன்னிலையில் மறித்துள்ளான். தன்னை காதலிக்கும் படி அவன் வலியுறுத்தியுள்ளான். ஆனால் மாணவி மறுத்துள்ளார்.

உடனே தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மாணவி அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த பொதுமக்களையும் அந்த மர்ம நபர் மிரட்டி, தாக்கியுள்ளார். 

பின்னர் சிறிது நேரத்தில் அவர் தப்பியோடிவிட்டார். உடனடியாக, உயிருக்கு ஆபத்தான நிலையில், தீக்காயங்களுடன், கல்லூரி மாணவியை மீட்ட பொதுமக்கள், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வாரங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை ற்கொண்டுள்ளனர். 

தெலுங்கானாவில், அண்மைக்காலமாக, ஒருதலைக்காதலால் பழிவாங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்கூட, ஒரு சிறுமியை, மர்ம நபர் ஒருதலைக் காதல் என்ற பெயரில், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதும் குறிப்பிடத்தக்கது.