பெற்ற தாய் முன்னிலையில் 5 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு! டீன் ஏஜ் பையனின் வில்லங்க செயல்!

புது டெல்லி: 5வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டீன் ஏஜ் நபரை போலீசார் கைது செய்தனர்.


இந்த குற்றத்தைச் செய்த டீன் ஏஜ் நபரின் பெயர் சாமன் என, டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த நபரின் தந்தை கட்டுமான கான்டிராக்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சாமன் தனது அண்டை வீட்டில் வசிக்கும் 5 வயது சிறுமி, தனியாக இருப்பதை பார்த்து சபலப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், திடீரென உள்ளே நுழைந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அப்போது, சிறுமியின் தாய் வீட்டுக்குள் வரவே, சாமன் கையும், களவுமாக சிக்கிக் கொண்டார். உடனடியாக, சிறுமியின் தாய் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்தனர்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.