கட்டி அணைத்த ஆசிரியை! கதறி அழுத மாணவிகள்! காரணம் என்ன தெரியுமா?

மாணவர்களுக்கு புத்துணர்வூட்டி கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் முயற்சியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பள்ளிச் சுவற்றில் நான்கு குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. இதயம், தட்டிக் கொடுத்தல், கைகுலுக்குதல் உள்ளிட்ட இந்தக் குறியீடுகளில் மாணவர் எதைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த முறையில் ஆசிரியர் மாணவருக்கு வரவேற்பளிக்கிறா. உதாரணமாக மாணவர் இதயத்தை தேர்ந்தெடுத்தால் ஆசிரியர் கட்டியணைத்து  வரவேற்பு அளிப்பார்.

பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பல்வேறுதரப்பினரையும் கவர்ந்தது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்று கோடை விடுமுறை முகாமுக்கு வந்த மாணவர்களிடம் இந்த முயற்சியை சற்றும் தயங்காமல் செயல்படுத்தியுள்ளது

இது மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரித்துள்ளதாக பள்ளி முதல்வர் ருபா கூறுகிறார். மாணவர்களுக்கு குடும்பச் சூழல், வறுமை உள்ளிட்ட பிரச்சினைகளை எவரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவர் தான அவர்களை அரவணைத்த போது அவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டதாக அவர் தெரிவித்தார். 

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிமையான வரவேற்பு அளிக்கப்பட்டால் அவர்களின் நாள் இனிமையாக இருப்பதோடு, மதிப்பெண்களும் உயரும் என்றும் அவர் கூறினார். இந்த வீடியோவும் இணையதளத்தில் பரவி வரும் நிலையில் இந்த முறையை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மாநில கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.