பள்ளிக் கூடத்தில் ஓரினச் சேர்க்கை..! மாணவர்களை செய்ய வைத்து பார்த்து ரசித்த ஆசிரியர்! அதிர வைத்த சம்பவம்!

திருவனந்தபுரம்: அரசுப் பள்ளி மாணவர்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


கேரள மாநிலம், நெடுங்காடு பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு, உடற்கல்வி  ஆசிரியராக செயல்படும் பாபி ஜோசப் என்ற நபர், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை தேர்வு செய்து, அவர்களுடன் பாலியல் உறவு கொளவதை வாடிக்கையாகச் செய்திருக்கிறார். இதுதவிர, சிறுவர்களை அவர்களுக்குள்ளேயே உடலுறவு செய்யும்படி மிரட்டி அதனை பார்த்து ரசிப்பதையும் பாபி ஜோசப் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இதன்பேரில், பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர், Souhrida Club எனும் சமூக தொண்டு நிறுவனத்திடம் புகார் செய்தார். அவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் கூற, குறிப்பிட்ட ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  

  இத்தனைக்கும் பாலியல் சித்ரவதைக்கு ஆளான மாணவர்கள் பலரும் 11ம் வகுப்பு படிப்பவர்கள். இந்த வயதில்தான் இனப்பெருக்க உறுப்பு முழு வளர்ச்சி அடையும் என்பதால் இதனை அடிப்படையாக வைத்து, பாபி ஜோசப் இந்த கொடூரத்தை செய்து வந்திருக்கிறார். அவர் மீது சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்படி (போக்சோ) வழக்குப பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.